அல் ஹாபில் இன்திகாப் உமரீ படைப்பாளன் அல்லாஹ்வால் மனித குலத்தை இணைவைப்பிலிருந்தும், சமூகச் சீர்கேடுகளிலிருந்தும் பாதுகாப்பதற்காகத் தான் இப்பூமிக்கு இறுதித் தூதர் முஹம்மத் (ﷺ) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அவர்களுக்கு அருளப்பட்ட வேதம் அல் குர்ஆனாகும். இறைவனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி அகிலத்தாரை அல் குர்ஆனின் பக்கம் அழைத்து அதனைக் கற்றுக் கொடுக்கும் அழைக்கும் பணியாகும். அல்லாஹ் கூறுகின்றான்.. يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ ۖ وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا […]
Read MoreCategory: கட்டுரை
மாறு செய்வதின் மூலம் இஸ்லாத்தின் தனித்துவத்தைப் பேணுவோம்.
அல்லாஹ் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களைப் படைத்து பூமிக்கு அனுப்பிய பின்பு அவர்களுக்குத் தெரிவு செய்த வாழ்க்கை நெறி தீனுல் இஸ்லாமாகும். முதல் மனிதன் தொடக்கம் இறுதி மனிதன் வரை ஏற்று நடக்க வேண்டிய வாழ்கை நெறியும் தீனுல் இஸ்லாமாகும். இந்த உலகில் தோன்றி மறைந்த அனைத்து இறைத்தூதர்களும் தீனுல் இஸ்லாத்தைத் தான் பிரச்சாரம் செய்தார்கள். இந்த உலகில் உள்ள கொள்கைக் கோட்பாடுகள், சித்தாந்தங்கள், எதனோடு இஸ்லாத்தை நீங்கள் ஒப்பிட்டாலும் இஸ்லாம் தனித்துவமாக சிறந்து விளங்கும். […]
Read Moreமுஹர்ரம் மாதமும், ஆஷூரா நோன்பும்.
அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் தற்போது நாம் இருக்கின்றோம். முஹர்ரம் மாதம் வந்து விட்டால் குறிப்பாக இம்மாதத்தில் மூன்று நிகழ்வுகளைப் பற்றி அதிகமாக பேசப்படுவதையும் அதை காரணமாக்கி சில காரியங்கள் அரங்கேற்றப்படுவதையும் நாம் அறிவோம். எனவே முஹர்ரம் மாதத்தில் நாம் நடைமுறைப்படுத்த வேண்டிய சுன்னாக்களைப் பற்றிய ஒரு தெளிவை இந்த ஆக்கத்தினூடாக வழங்குவது பயனளிக்கும் என நினைக்குறேன். 1 ) மாதங்களைப் பற்றி அல்லாஹ் என்ன சொல்கிறான்: إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللَّهِ اثْنَا عَشَرَ […]
Read Moreமஸ்ஜித் நிர்வாகிகளே..!
மவ்லவிமாரின் கொடுப்பனவு விடயத்தில் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ளுங்கள்.
அன்பார்ந்த ஈமானிய உறவுகளே..!அன்மைக் காலமாக மஸ்ஜித் இமாம்களின் கொடுப்பனவு பற்றி மஸ்ஜித் நிர்வாகிகள் அதிகம் பேசுவதை உள்ளூர் மட்டத்தில் நீங்கள் அறிந்திருப்பீர்கள். Covid19 காரணமாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம். பல தொழிற்சாலைகள் , மற்றும் வியாபார நிலையங்கள் மூடப்பட்டதின் காரணமாக பலரும் தொழிலை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இதே பின்னனியில் மஜ்ஜிதில் பணிபுரியும் இமாம்களில் சிலரை சில மஸ்ஜித் நிர்வாகங்கள் சம்பளத்தைக் காரணமாகக் கூறி பணி […]
Read Moreஉழ்ஹிய்யாப் பிராணிகளை எப்போது பலியிட வேண்டும்..?
அல் ஹாபிழ் இன்திகாப் உமரீ ஒரு அமலை நாம் நிறைவேற்றும் போது அந்த அமலை எப்போது, எப்படிச் செய்வது என்ற அறிவு எங்களிடம் இருப்பது அவசியமாகும்.அந்த அறிவு இல்லாமல் நாம் ஒரு அமலை நிறைவேற்றும் போது பல நன்மைகளை தவற விட்டுவிடுவோம் . சில வேலை முழு நன்மைகளையும் தவற விடும் நிலைகள் கூட ஏற்பட்டு விடலாம். அதனால் ஒரு அமலை நாம் செய்ய முன் அந்த அமல் குறித்து சொல்லப்பட்டுள்ள முழுத் தகவல்களையும் முதலில் அறிந்து […]
Read Moreதுல் ஹஜ் முதல் பத்து நாட்களில் செய்யப்படும் அமற்களின் சிறப்புக்கள்.
அடியார்கள் தன்னை நெருங்க வேண்டும் என்பதற்காக இரக்கமான றப்புல் ஆலமீன் பல சந்தர்பங்களை எமக்குத் தந்து அமற்களால் சிறந்தவர்களாக நாம் மாற ஒவ்வொரு கால கட்டத்திலும் வாய்ப்பளிக்கின்றான். அந்த அடிப்படையில் இப்போது நாம் இருக்கக் கூடிய மாதம் புனித மாதங்களில் ஒன்றாகும். இதைத் தொடர்ந்து வர இருக்கும் துல் ஹிஜ்ஜா ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்கையிலும் சுவனத்துக்கான அருவடை காலமாகும். இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் பொதுவாகப் பிறையை அடிப்படையாகக் கொண்டிருக்கும். அந்த அடிப்படையில் இப்போது நாம் துல் கஃதா […]
Read Moreஒரு முஃமினுடைய வாழ்வில் இரவு நேரம் 02
ஒரு முஃமினுடைய வாழ்வில் இரவு நேரம் என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்ற நேரமாகும். இந்த நேரத்தை தேவையற்ற பேச்சுக்கள், மற்றும் வீணான விளையாட்டுக்களைக் கொண்டு வீணடிப்பதை இஸ்லாம் விரும்ப வில்லை. இஷா தொழுகைக்குப் பின் தேவையற்ற பேச்சுக்களில் ஈடுபடுவது. அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை இரவின் மூன்றிலொறு பகுதிவரைத் தாமதப்படுத்துவார்கள். இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசிக்கொண்டிருப்பதையும் வெறுப்பார்கள். (முஸ்லிம் : 1139.) பகல் […]
Read Moreஉயிரோட்டமில்லாத அன்னையர் தின வாழ்த்துக்கள்…
சர்வதேச அரங்கில் மே மாதம் இரண்டாம் வார ஞாயிற்றுக்கிழமையன்று வருடாவருடம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் அன்னையர் தினமானது ஐக்கிய அமெரிக்கா இராச்சியத்தில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் Anna Maria Jarvis (May 1, 1864 – November 24, 1948) என்பவரால் அறிமுகப்படுத்தப்படுகிறது. இது அன்னையர் தின குறுகிய அறிமுகமாகும். அன்னை,தாய்,அம்மா போன்ற சொற்பிரயோகங்களைத் தாண்டிச் சென்று தமக்கேயான அன்பு கலந்த பெயர்கள் கொண்டு அன்புக்கு இலக்கணமான இத்தாய்மார் அழைக்கப்படுகின்றனர். இன்று உலகளவில் உண்மையான அன்புக்கு உதாரணமாக […]
Read Moreஒரு முஃமினுடைய வாழ்வில் இரவு நேரம் 01
ஒரு முஃமினுடைய வாழ்வில் இரவு நேரம் என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்ற நேரமாகும். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இந்த இரவு நேரத்தை பல அமற்களைக் கொண்டு அலங்கரித்துள்ளார்கள். எனவே இவ்வாக்கத்தில் நபிகளாரின் இரவு நேர அமற்களைப் பற்றிய சிறு தொகுப்பை உங்களுக்கு முன்வைக்க விரும்புகிறேன். நபிகளாரின் வாழ்நாளில் இஷா தொழுகையின் பின் சுன்னத்துக்குப் பிறகு அவர்கள் செய்துள்ள காரியம் என்ன என்று நாம் தேடினோம் எனில் இரவுத்தொழுகையை அவர்கள் பேணித் தொழுது வந்தமைக்கான சான்றுகளை பெற்றுக்கொள்ள […]
Read Moreபஞ்சமான காலத்தை எதிர்கொள்ள நபி யூஸுப் அலை அவர்கள் கையாண்ட நிர்வாக முறைகள்.
பொருளாதாரத்தில் உச்சத்தை நாம் தொட்டு விட்டோம், தன்னை மிஞ்ச யாருமில்லை, நாம் நினைத்தால் யாரையும் வீழ்த்தி விடலாம், என அமெரிக்கா , சீனா, இஸ்ரேல் , ஈரான் போன்ற வல்லரசு நாடுகள் மார்தட்டிக் கொண்டிருந்த வேலையில் உலக மக்களின் உயிர்களை மாத்திரமின்றி பொருளாதரத்தையும் ஆட்டம்காண வைக்க இப்பூமிக்கு சோதனையாக இறைவனால் அனுப்பிவைக்கப்பட்ட அணு அளவே கொண்ட கண்ணுக்குத் தெரியாத உயிரினம் தான் Covid19 ஆகும். அன்று அணு ஆயிதத் தயாரிப்பதில் போட்டி போட்ட நாடுகள் இன்று இந்த […]
Read More