கடந்த அசாதாரன் சூழ்நிலையில் பாதுகாப்புத் தரப்பினருக்கும் அரசுக்கும் வழங்கப்பட்ட தவறான தகவலை அடித்து முழுமையாக மூடப்பட்டிருந்த குருநாகலை மாவட்டத்தின் ஹெட்டிபொல பொலீஸ் பிரிவில் அமைந்துள்ள மஸ்ஜித் லூலு அம்மார் ஜும்ம பள்ளிவாசல் அல்லாஹ்வின் உதவியால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
சட்ட ரீதியாக முஸ்லீம் கலாச்சர திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட பள்ளிவாசலில் ஜும்மா தொழுகை மற்றும் ஐவேளை தொழுகைகள நடாத்த பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டிருப்பது தொடர்பில் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சுக்கு முறைப்படு செய்ப்பட்டதைத் தொடர்ந்து, ஐவேலை தொழுகைகளை ஆரம்பிக்குமாறும் அங்கீகரம் வழங்கப்பட்டது.
பின்னர் நேற்ரைய தினம் பள்ளிவாசல் நிருவாகிகள் சிலர் பொலீசுக்கு அழைக்கப்பட்டு ஹெட்டிபொல பொலிஸ் நிலைய பதில்பொறுப்பதிகாரி பள்ளிவாசலில் தொழுகை நடாத்தவதற்கும் ஜும்ஆ கடமைகளை நிறைவேற்றவும் உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளார்.
இன்ஷா அல்லாஹ் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஜும்ஆ பிரசங்கமும் இடம்பெறவுள்ளது. இந்த ஜும்ஆ பிரசங்கத்தை ஜமாஅத்தின் தேசிய தலைவர் அஷ் ஷெய்க் அப்துல் வதூத் (ஜிப்ரி) அவர்கள் நிகழ்த்தவுள்ளார்கள்.
லுஃலு பள்ளிவாசல் தௌஹீத் பள்ளிவாசல் என்று முறைப்பாடு செய்யப்பட்டதனையடுத்து கடந்த ஜூலை 18 ஆம் திகதி முதல் அப்பள்ளிவாசலில் குளியாப்பிட்டி உதவி பொலிஸ் அத்தியட்சகரினால் தொழுகைகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.