ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் குருநாகல் மாவட்ட நிருவாகமும், UTJ நிக்கவெரட்டிய கிளை ஜாமிஉத் தௌஹீத் நிருவாகமும் இணைந்து கடந்த 2018/11/03 ஆம் திகதி நிக்கவெரட்டியவில் நடத்திய மாபெரும் இஜ்திமாவில் UTJ மஜ்லிஸ் ஸூரா, உயர்பீடம், என்பவற்றின் உறுப்பினரும், UTJ குருநாகல் மாவட்ட உலமாக்கள் கூட்டமைப்பின் பிரதித்தலைவருமான அஷ்ஷெய்க் ரமீஸ் (ஸலபி, ரியாதி) தலைமை யில் நடைபெற்றது.
நிக்கவெரடிய சந்தைத் தொகுதியில் நடைபெற்ற இந்த இஜ்திமாவில் பெருந்திரலான மக்கள் கலந்துகொண்ட்னர். இதன் போது அஷ்ஷெய்க் நியாஸ் ஸித்தீக்(ஸிராஜி)
இலக்கை நோககிய இளைஞர்கள் சமுதாயம்
என்றதலைப்பிலும், அஷ்ஷெய்க் ரஸ்மி ஸாஹித்(அமீனி)
இலக்கு சுவனமெனின் என்ற தலைப்பிலும், அஷ்ஷெய்க் முர்ஸித்(அப்பாஸி) மறுக்கப்படும் சுன்னாக்களும்,புதுமை பெறும் பித்ஆக்களும் என்ற தலைப்பிலும், ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் பிரதித்தலைவர் அஷ்ஷெய்க் மஸீர்(அப்பாஸி) அன்பான மனைவி பண்பான கணவன்
என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.