திகன காணி கையளிப்பு

திகன் பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் பல உதவிகளையும் நிவாரனங்களையும் வழங்கியமை அனைவரும் அறிந்ததே.
அதன் ஓர் அங்கமாக திகன கல்வரத்தின் போது பாதிக்கப்பட்ட கம் உதாவ திட்டத்தில் வதிந்த ஐந்து (05) குடும்பங்களுக்கு 10 பேச் காணி வீதம் 50 பேச் காணியை கொல்வனவு செய்து கையளிக்கும் நிகழ்வு கடந்த 02.09.2018 ஞாயிற்றுக் கிழமை திகனையில் இடம்பெற்றது. இந்த செயற்திட்டத்திற்கு ஐக்கிய ராச்சியத்தில் வசிக்கும் இலங்கையர்களின் தஃவா அமைப்பான அல் ஃபுர்கான் தஃவா அமைப்பு (FIDA) அனுசரனை வழங்கியிருந்தது.

இவற்றுக்கு மேலதிகமாக UTJ ஊடகப் பிரிவினூடாக பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக அனுகி அவர்களின் பாதிப்புகள் தொடர்பில் சர்வதேசத்திற்கு எத்திவைக்கும் பனிகளையும் மேற்கொண்டது. இதனால் பாதிக்கப்பட்டொரை நேரடியாக தொடர்புகொள்ளும் வாப்பினை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தமையும் குறிப்பிடத் தக்கது. இதன் மூலம் பல பாதிக்கப்பட்டோரும் நனமையடைந்ததாக எமக்கு அவர்களால் அறியத்தரப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *