வெள்ள அனர்த்த நிவாரனம், நாத்தாண்டிய

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் நாத்தாண்டிய, தும்மோதர கிராமமும், பாதிக்கப்பட்டது. கிணறுகளில் வெள்ளம்பாய்ந்ததால் கிணறுகள் மாசடைந்துள்ள நிலையில் அன்றாட தண்ணீர் தேவையைப்பூர்த்தி செய்து கொள்ளமுடியாத நிலைக்கு அக்கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் (UTJ) தும்மோதர கிளைத் தலைவரின் வேண்டுகோளுக்கினங்க ஐக்கிய தௌஹீத் ஜமாத் அக்கிராம மக்களுக்கு உதவ முன்வந்தது. அதனடிப்படையில் கடந்த 2018/06/04 ஆம் திகதி ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் மத்திய செயற்குழுவும், சமூக சேவைப்பிரிவும் அங்கு சென்று கிணறுகளை சுத்திகரிப்பதற்கான இயந்திரங்களும், உபகரணங்களும், கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஐக்கிய தௌஹீத் ஜமாத் பொதுச் செயலாளர் ஏ.எல்.எம்.மன்ஸூர் மஜ்லிஷுஷ் ஸூறா;மற்றும் உயர்பீட உறுப்பினரும், இபுனு மஸ்ஊத் அரபுக்கல்லூரி அதிபருமான அஷ்ஷெய்க் நஸுருத்தீன்(பலாஹி), மற்றும் சமூகசேவைப்பிரிவினரும் ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் தும்மோதர கிளைத்தலைவர் சகோதரர் தாஜுல்அமீர் ஆகியோரும் தும்மோதர ஜும்ஆ பள்ளிவாசல் பரிபாலன சபைத்தலைவர் உள்ளிட்ட நிருவாகிககளும் பங்கேற்றிருந்தனர். தும்மோதர முஸ்லிம் வித்தியாலயத்தின் கிணறு சுத்திகரிகாகப்படுவதை படங்களில் பார்வையிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *