மன்னார் IDC மீதான தடை நீக்கம்

ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் மன்னார் மாவட்ட நிருவாகத்திற்குட்பட்ட மன்னார் நகர கிளையான “இஸ்லாமிய தஹ்வா நிலையம்” IDC (ISLAMIC DAHWA CENTRE) மீது பொய்க்குற்றச்சாட்டு சோடிக்கப்பட்டு பிரதேசப் பள்ளிவாசல் தலைவர் உள்ளிட்ட நிருவாகிகளினால் மன்னார் பொஸிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டைத்தொடர்ந்து மன்னார் பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரியினால் எதுவித விசாரணையுமின்றி தொழுகை உள்ளிட்ட சகல நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்து IDC நிருவாகிகள் விடயத்தை ஜக்கிய தௌஹீத் ஜமாத்தின் (UTJ) கவனத்திற்கு கொண்டு வந்தது. உடனடி நடவடிக்கையாக மன்னார் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி, மன்னார் தலைமையகப்பொறுப்பதிகாரி, (HQI) மன்னார் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர், ஆகியோரிடம் சம்பந்தப்பட்டவர்களுக்கெதிராக UTJ உரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத்தெரிவித்து தொலை நகல்மூலமும், மின்னஞ்சல் மூலமும் கடிதங்கள் அனுப்பப்பட்பதைத்தொடர்ந்து இருசாராரையும் அழைத்து விசாரணை நடத்தியபின் IDC அமைப்புக்கு எதிராக பொலீஸாரினால் விதிக்கப்பட்டிருந்த சகல தடைகளும் வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. தற்போது நிலமை சுமுகமான உள்ளது. அச்சுறுத்தல்கள்,பயமுறுத்தல்கள் தொடருமானால் மேலதிக சட்டநடவடிக்கைகள் தொடருமென UTJ தனது விஷேட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *