கடந்த 2017ம் ஆண்டு கிண்ணியா பகுதியில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட மக்களை ஐக்கிய தௌஹீத் ஜமாத் (United Thowheedh Jama’ath) அப்பிரதேசத்திற்குச் சென்று நலம் விசாரித்து அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து நிவாரனங்களைக் கையளித்த போது கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரியின் காரியாலயத்தின் டெங்கு நோய்த் தடுப்புப் பிரிவிற்கு ஓர் முச்சக்கர வண்டியின் தேவை இருப்பதாக வேண்டுகோளொன்று முன்வைக்கப்பட்டது, அவ்வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஐக்கிய தௌஹீத் ஜமாத் கடந்த 13/02/2018 ம் திகதி ஜமாத்தின் திருகோணமலை மாவட்ட நிர்வாகத்தினூடாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரியின் பணிமனைக்கு முச்சக்கர வண்டியொன்றை அன்பளிப்புச் செய்தது