ஆறு நாட்களில் உலகம் படைக்கப் பட்டதா ?

உலகம் எத்தனை நாட்களில் படைக்கப் பட்டது ? என்ற கேள்விக்கான விடையை குர்ஆன், மற்றும் ஹதீஸ்களில் காணலாம். ஆனால் சமீபகாலமாக முரண்பாடு எனும் பெயரில் ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரிப்போர்கள் உலகிலுள்ள பொருட்கள் படைக்கப் பட்ட தினங்கள் வரக் கூடிய சம்பந்தமான ஹதீஸையும் குர்ஆனுக்கு முரண் படுகிறது என்று மறுக்கிறார்கள். அல்லாஹ் உலகத்தை ஆறு நாட்களில் படைத்தாக குர்ஆனில் குறிப்பிடுகிறான், ஆனால் ஹதீஸில் ஏழு நாட்களில் படைக்கப்பட்டதாக வந்துள்ளதால் இது குர்ஆனுக்கு முரண் படுகிறது என்று சொல்லி அந்த […]

Read More

பெற்றோர்களே! எச்சரிக்கையாக இருங்கள்…

உலகத்தில் மிகச் சிறந்த செல்வம் பிள்ளைச் செல்வம் என்பார்கள். திருமணம் முடித்தவுடன் அடுத்ததாக தங்களுக்கு பிள்ளைகள் வேண்டும் என்று அனைத்து தம்பதியினரும் எதிர்பார்ப்பார்கள். இதில் யாரும் விதிவிலக்கல்ல, ஒரு தாய் தன் குழந்தையை பெற்றெடுப்பது எப்படி கஷ்டமோ, அதை விட அவர்களை நல்ல முறையில் வளர்த்தெடுப்பது கஷ்டமாகும். பெற்றோர்கள் நல்லவர்களாகவும், சரியான வழிக்காட்டிகளாகவும் இருந்தால் பிள்ளைகளும் சரியான முறையில் வளர்ந்து வருவார்கள்.பெற்றோர்கள் கவனயீனமாக இருந்தால் பிள்ளைகள் பல வழிகளில் வழி தவறி செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. […]

Read More

ரமழான் மாதத்திற்காக ஷஃபானில் சில உபதேசங்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகி அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும், அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அன்னாரின் குடும்பத்தினர், அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக. பலவிதமான பாக்கியங்கள் பெற்ற ரமழான் மாதத்தை ஒவ்வொரு முஸ்லிமும் நபியவர்கள் காட்டித்தந்த விதத்தில்; பயன்படுத்துவதினூடான அதன் ழுமுமையான பயனை பெற்றுக் கொள்ளலாம். அந்த அடிப்படையில் ஷஃபான் மாதத்தை சிறப்பாக பயன்படுத்துவதினூடகவே அந்த பாக்கியத்தை அடைந்து கொள்ளலாம். […]

Read More

அடங்காதவர்களை அல்லாஹ் அடக்குவான் !

இஸ்லாத்தை இழிவு படுத்தும் எண்ணத்தில் அன்றைய காலத்தில் இருந்து இன்றைய காலம் வரை உலகம் முழுவதும் பல சூழ்ச்சிகளையும், பல குழப்பங்களையும், செய்து வருகிறார்கள். முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்பவர்ளை மூன்று வகையினராக பிரிக்கலாம். முதல் வகையினர் முற்றிலும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள். இவர்கள்இஸ்லாத்தின் வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாமல் ஆத்திரத்தில் முஸ்லிம்களை களங்கப்படுத்த வேண்டும் என்றடிப்படையில் முஸ்லிம்கள் தீவிரவாதிகள், இஸ்லாம் பயங்கரவாதத்தை துாண்டுகிறது என்று பல தொடர் சூழ்ச்சிகளை செய்து வருகிறார்கள். இரண்டாவது வகையினர் முஸ்லிம்களாகும். அவர்கள் […]

Read More

கடன் விடயத்தில் பொடுபோக்கு வேண்டாம்!

بسم الله الرحمن الرحيم அல்லாஹுத்தஆலா மனிதர்களைப் படைத்து அவர்களுக்கு மத்தியில் சகோதரத்துவம், உரிமைகள், கடமைகள் என அனைத்தையும் பேணி நடக்குமாறு கட்டளையிட்டுள்ளான். அத்தகைய உரிமைகளில் ஒரு பகுதி அல்லாஹ்வுடன் தொடர்புபட்டதாகவும் மற்றும் ஒரு பகுதி அடியார்களுடன் தொடர்புபட்டதாகவும் காணப்படுகின்றன. இவற்றுள் அல்லாஹ்வுடன் தொடர்புட்ட பகுதியைப் பொருத்தளவில் அது மீறப்படும் போது அவனின் மன்னிப்புக்குப் பாத்திமானதாகக் காணப்படுகின்றது. ஆனால், அடியார்களுடன் தொடர்புபட்ட பகுதி அவசியம் சம்பந்தப்பட்டவர்களுடன் மன்னிப்புப் பெற்றாக வேண்டியதாக உள்ளது. அதனால் தான் இவ்வகை உரிமைமீறல் […]

Read More

பெருகி வரும் போதைப் பாவனை

உலக அழிவின் அடையாளங்களில் போதைப் பாவனை பெருகுவதும் ஒன்றாகும். அதை நாம் இன்று நிதர்சனமாகக் கண்டு வருகின்றோம். ஆரம்ப காலத்தில் சாராயம், கள் என்றிருந்த போதை இன்று பல்வேறு வடிவம் பெற்று புதுப்புது வடிவங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றது. திடீர் பணக்காரனாக வேண்டும் என ஆசைப்படுபவர்கள் போதை வியாபாரத்தில் ஈடுபடுவதை அதற்கான இலகுவான வழியாகப் பார்க்கின்றனர். போதை வியாபார மாபியாக்கள் அரசியல் பண பலத்துடன் தங்களது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் நகர்ப்புறங்களைக் குறிவைத்த இவர்கள் இப்போது […]

Read More

அன்பை வளர்க்கும் அன்பளிப்புகள்!

இஸ்லாம் மார்க்கம் சக மக்களுடன் அன்பாகவும், பாசமாகவும் இணைந்து சந்தோசமாக வாழ வேண்டும் என்பதற்காக பல வழிகளை நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான ஒன்று தான். அனபளிப்புகளை மாறி, மாறி கொடுத்துக் கொள்வதாகும்.  அன்பளிப்புகளை மாறி, மாறி, கொடுப்பதன் மூலம் மனிதர்களுக்கு மத்தியில் அன்பும், ஒற்றுமையும் அதிகரித்துக் கொண்டே போகும்.  எப்படி ஒரு மனிதனுக்கு ஸலாம் சொல்லும் போது அன்புகள் பறிமாறப் படுகின்றனவோ அது போல அன்பளிப்புகள் மூலம் அன்புகளும் பறிமாறப் படுகின்றன. அதனால் […]

Read More

பாதையின் ஒழுங்கு முறைகள்

நாம் வீதிகளில் செல்லும் போது எந்த ஒழுங்கு முறைகளோடு செல்ல வேணடும் என்பதை இஸ்லாம் நமக்கு அழகான முறைகளில் வழிக்காட்டுகின்றன. ஒரே கல்லில் இரண்டு மாங்கா என்பது போல, ஹதீஸின் அடிப்படையில் பாதையின் ஒழுங்கு முறைகளை பேணி நடப்பதோடு, அல்லாஹ்விற்கு கட்டுப் பட்ட அடியார்களாகவும் மாற முடியும். பாதையின் உரிமைகள். ஒரு மனிதர் பாதையில் செல்லும் போது எந்த ஒழுங்கு முறைகளோடு செல்ல வேண்டும் என்பதை பின் வரும் நபி மொழி கூறுவதை கவனியுங்கள். பு 6221 […]

Read More

பிற கடவுள்களை ஏசாதீர்கள்

இந்த உலகத்தில் படைக்கப்பட்ட முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் முதல் இன்று வரை பல கோடி மக்கள் படைக்கப்பட்டுள்ளார்கள். அன்றைய காலம் முதல் இன்று வரை அவரவர் விரும்பியவர்களை (மகான்களை) கடவுளாக அமைத்துக் கொண்டார்கள். காலப் போக்கில் அவர்களே தனது குல தெய்வங்களாக மாற்றப்பட்டு வணங்கிவரப்படுகிறது. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அல்லது ஒவ்வொரு சமயத்திற்கும் அவரவர் நம்பிக்கை வைத்த கடவுள்கள் இருக்கிறார்கள். அவரவர் சமயத்திலிருந்து அடுத்த சமயத்தவர்களின் கடவுளைப் பார்க்கும்போது அது அவர்களுக்கு குறையாகவே விளங்கும். அதேபோல […]

Read More

எதிர்ப்புணர்வுகளுக்கு எண்ணெய் வார்க்கும் எம்மவர்கள்

முஸ்லிம் சமூகத்தை சீண்டிப் பார்ப்பதற்காகவும் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சிகளைக் கக்குவதற்காகவும் இஸ்லாமிய விரோத சக்திகள் காலத்துக்குக் காலம் சில பிரச்சினைகளைத் தூக்கிப் பிடிப்பதுண்டு! அதில் ஒன்றுதான் பொது சிவில் சட்டம் எனும் கோஷமாகும். இந்தியாவில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று இனவாத, மதவாத சிந்தனைப் போக்குடைய PJP அரசு சில முன்னெடுப்புக்களை நகர்த்தி வருகின்றது. நடுநிலையான சில சிந்தனையாளர்களும் நாட்டின் ஒற்றுமையையும் ஒருமுகப்பட்ட போக்கையும் எடுத்துக் காட்டும் வண்ணம் […]

Read More