திஹாரிய ஜாமிஉ அபூபக்கர் பள்ளிவாசளை மீட்டும் தௌஹீத் சகோதர்களிடம், நீதிமன்றம் உத்தரவு

கம்பஹா மாவட்டத்தின் திஹாரிய “செண்ட்ரல் பிலேஸ்” பிரதேசத்தில் இயங்கிவந்த மஸ்ஜித் ஜாமிஉ அபூபக்கர் பள்ளிவாசல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 05 ஆம் தேதி ஜும்ஆ ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே இப் பள்ளிவாசலுக்கு அருகில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ரவுலா பள்ளிவாசல் நிருவாகிகளின் தலையீட்டுடன் மக்கள் தூண்டபட்டு பள்ளிவாசல் சுற்றிவளைக்கப்பட்டு பலவந்தமாக கைப்பற்றப்பட்டது.

பின்னர் பள்ளிவாசல் நிருவாகிகள் இது தொடர்பாக அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் (21174/66) வழக்குத் தொடர்ந்தனர். பல்வேறு இடையூருகலுக்கு மத்தியில் வழக்கு சுமார் ஓரு வருடமாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (2017.08.08) வழக்கு இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அத்தனகல்ல மஜஸ்ட்ரேட் தினேஷ் லக்மால் பெரேரா அவர்களால் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் பள்ளிவாசலின் முழு உரிமையும் “மர்கசுல் இஸ்லாம் தஃவா ஃபௌண்டஷன்” இற்கே உரித்தாவதாகவும், அதன் கீழ் இயங்கிவந்த நிருவாகிகளிடம் பள்ளிவாசல் மீள ஒப்படைக்கப்பட வேண்டுமென்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அல்ஹம்துலில்லஹ்.

இன்ஷா அல்லாஹ், எனைய சட்ட ஏற்பாடுகள் பூர்த்தியான பின்னர் மிக விரைவில் பள்ளிவாசல் தௌஹீத் ஜமாத் தரப்பினரால் கையேற்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *