அடங்காதவர்களை அல்லாஹ் அடக்குவான் !

இஸ்லாத்தை இழிவு படுத்தும் எண்ணத்தில் அன்றைய காலத்தில் இருந்து இன்றைய காலம் வரை உலகம் முழுவதும் பல சூழ்ச்சிகளையும், பல குழப்பங்களையும், செய்து வருகிறார்கள்.

முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்பவர்ளை மூன்று வகையினராக பிரிக்கலாம். முதல் வகையினர் முற்றிலும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள்.

இவர்கள்இஸ்லாத்தின் வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாமல் ஆத்திரத்தில் முஸ்லிம்களை களங்கப்படுத்த வேண்டும் என்றடிப்படையில் முஸ்லிம்கள் தீவிரவாதிகள், இஸ்லாம் பயங்கரவாதத்தை துாண்டுகிறது என்று பல தொடர் சூழ்ச்சிகளை செய்து வருகிறார்கள்.

இரண்டாவது வகையினர் முஸ்லிம்களாகும். அவர்கள் குர்ஆன்மற்றும் சுன்னா அடிப்படையில உள்ளவர்களை பழிவாங்க வேண்டும் என்றடிப்படையில் பலவிதமான பொய்களை கூறி மார்க்கத்தின் பெயரால் குழப்பங்களை செய்து வருபவர்கள்.

மூன்றாவது வகையினர் குர்ஆன் மற்றும் சுன்னா அடிப்படையில் உள்ளவர்கள் என்று சொல்லக் கூடிய இவர்கள் வேண்டும் என்று தங்களின் கருத்துகளுக்கு எதிர் கருத்து சொல்பவர்களை கருத்துகளால் எதிர் கொள்ளாமல் அருவருப்பான வார்த்தைகளால் ஏசுவதின் மூலமும்,கைகலப்பில் ஈடுபடுவதின் மூலமும் அராஜகம் செய்யக் கூடியவர்கள்.

மேற்ச் சுட்டிக் காட்டிய அனைத்து அநியாயக்காரர்களின் நினைப்பும் என்னவென்றால் எங்களிடத்தில் அதிகாரம் இருக்கிறது, எங்களிடத்தில் பட்டம்,பதவிகள் இருக்கின்றன, எங்களிடத்தில் பணம் இருக்கிறது, எங்களிடத்தில் பொலிஸ் அதிகாரம் இருக்கிறது, இப்படி உலக ரீதியில் சில அதிகாரங்களை வைத்துக் கொண்டு எங்களை யாரும் அசைக்க முடியாது.
எங்களிடம் மோதினால் அவர்களை அடிப்போம், பொலிஸ் மூலம் சிறைச்சாலைக்குள் தள்ளுவோம் என்று அகங்காரத்தோடு துள்ளுவதை காணலாம்.

இவர்கள் எந்த வகையினராக இருந்தாலும் இவர்கள் அத்தனை பேருக்கும் ஒரே தீர்வு தான், அது தான் அடங்காதவர்களை அல்லாஹ் அடக்குவான்.

நுாஹ் நபிக்கு எதிராக சூழ்ச்சி செய்தவர்களை வெள்ளத்தினால் அல்லாஹ் அழித்தான். அடங்காதவர்களை அல்லாஹ் அடக்கினான் !

மூஸா நபியை எதிர்த்த சூழ்ச்சிகாரர்களை கடழிலே மூழ்கடித்து அல்லாஹ் அழித்தான். அடங்காதவர்களை அல்லாஹ் அடக்கினான் !
சுஐப் நபியின் எதிரிகளை பூமியை தலை கீழாக ஆக்கி அல்லாஹ் அழித்தான். அடங்காதவர்களை அல்லாஹ் அடக்கினான் !
இப்படி இஸ்லாத்திற்கு எவரெல்லாம் திட்மிட்டு வேண்டும் என்று அநியாயம் செய்தார்களோ அவர்களை அல்லாஹ் கடுமையான முறையில் தண்டித்து அழித்த சரித்திரங்கள் இப்படிப்பட்டவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்.அடங்காதவர்களை அல்லாஹ் அடக்குவான்.

இவர்களும் எங்களை யாராலும் அசைக்க முடியாது, எங்களிடம் அதிக பலம் இருக்கின்றது என்ற இருமாப்பில் ஆட்டம் போட்டார்கள்.அடங்காதவர்களை அல்லாஹ் அடக்கினான் !
எங்களை எதிர்ப்பவர்களை நாங்கள் பந்தாடுவோம்.
பணம் கொடுத்து ஆட்களை ஏவிவிட்டு அராஜகம் செய்வோம்,
எங்களை தட்டிக் கேட்க யாருமில்லை என்ற ஆணவம் ?அடங்காதவர்களை அல்லாஹ் அடக்குவான்.

இறுதியில் இருந்த இடம் தெரியாமல் ஆட்டம் போட்டவர்களை அல்லாஹ் அழித்து அடக்கி காட்டினான்.

இந்த தண்டனை யாரு இப்படி செய்தாலும் அனைவருக்கும் ஒரே தண்டனை தான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு தனி மனிதன் மற்ற மனிதனுக்கு அநியாயம் செய்தாலும்,அடங்காதவர்களை அல்லாஹ் அடக்குவான்.

ஊரே சேர்ந்து அநியாயம் செய்தாலும், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அல்லாஹ்விடம் இருந்து தணடனை வரும். ஆனால் கொஞ்சம் தாமதமாகும்.அடங்காதவர்களை அல்லாஹ் அடக்குவான்.

அல்லாஹ்வுடைய தண்டனை வர ஆரம்பித்து விட்டால் எதை வைத்து இந்த அநியாயக்காரர்கள் துள்ளினார்களோ, அவைகள் அத்தனைகளையும் அல்லாஹ் பலம் இழக்க செய்து விடுவான்.அடங்காதவர்களை அல்லாஹ் அடக்குவான்.

இறுதியில் முகம் தொங்கியவர்களாக கூனி குருகி கேவலப்பட்டவர்களாக ஊரிலே காணப்படுவார்கள்.அடங்காதவர்களை அல்லாஹ் அடக்குவான்.
அல்லது முற்றிலும் கடுமையான தண்டனையின் மூலம் அல்லாஹ்வால் அழிக்கப்படுவார்கள். அடங்காதவர்களை அல்லாஹ் அடக்குவான்.

எனவே மார்க்த்தின் பெயரால் எல்லை மீறி அநியாயம் செய்பவர்கள் பிறருக்கு திட்டமிட்டு அநியாயம் செய்வதை நிறுத்திக் கொள்ளாவிட்டால்அடங்காதவர்களை அல்லாஹ் அடக்குவான்.

எந்த வடிவத்தில், எந்த நேரத்தில் இறை தண்டனை இவர்கள் மீது இறங்கும் என்பதை அந்த அல்லாஹ்வே அறிவான். அடங்காதவர்களை அல்லாஹ் அடக்குவான்.

அநியாயம் செய்யும் கூட்டத்தை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக !
அடங்காதவர்களை அல்லாஹ் அடக்குவான்.

 

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *