முஹர்ரம் தலைப்பிறை பார்ப்பது சம்பந்தமான அறிவித்தல்

இன்று ஹிஜ்ரி 1439 துல்ஹிஜ்ஜா பிறை 28 ஆகும். எனவே நாளைய தினம் (2018/09/10) ஹிஜ்ரி 1440 முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் நாளாகும். தீவின் எப்பாகத்திலாவது நாளைய தினம் பிறை தென்பட்டால் இன்ஷா அழ்ழாஹ் நாளை மறுநாள் 2018/09/11 செவ்வாய்க்கிழமை ஹிஜ்ரி 1440 முஹர்ரம் மாதத்தின் ஆரம்ப நாளாகும்.நாளை பிறை தென்படாவிட்டால் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை (2018/09/11) ஹிஜ்ரி 1439 துல்ஹிஜ்ஜாபிறை 30 ஆக பூர்த்தி செய்ய ப்பட்டு 12 ஆம் திகதி புதன் கிழமை ஹிஜ்ரி 1440 முஹர்ரம் முதலாவது நாளாகும்.

நாளைய தினம் தீவின்(நாட்டின்) எப்பாகத்திலாவது பிறை தென்பட்டால் UTJ மாவட்ட நிர்வாகங்களினூடாக அப்பிறைத் தகவலை ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் தலைமையகத்திற்கு எத்தி வைக்க முடியும். அல்லது பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு பிறைத்தகவலை எத்தி வைக்கமுடியும்.

தலைவர் : 0772848419
பிரதித் தலைவர் : 0772907803
பொதுச்செயலாளர் : 0774331171

பிறைத்தகவல் ஊர்ஜிதப்படுத்தப்பட்டபின் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு பிறைத்தகவல் எத்திவைக்கப்படும்.

சர்வதேசப் பிறை

மேலும் சர்வதேச பிரைக் கணிப்பீட்டின் அடிப்படையில் இன்று ஹிஜ்ரி 1439 துல்ஹிஜ்ஜா பிறை 29 ஆகும். எனவே இன்றைய தினம் ஹிஜ்ரி 1440 முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் நாளாகும். இன்றைய தினம் உலகின் எப்பாகத்திலாவது பிறை தென்பட்டால் இன்ஷா அழ்ழாஹ் நாளை (2018/09/10) திங்கற் கிழமை ஹிஜ்ரி 1440 முஹர்ரம் மாதத்தின் ஆரம்ப நாளாகும். இன்று பிறை தென்படாவிட்டால் நாளை திங்கற்கிழமை (2018/09/10) ஹிஜ்ரி 1439 துல்ஹிஜ்ஜா 30 ஆக பூர்த்தி செய்ய ப்பட்டு 2018/09/11 ஆம் திகதி செவ்வாய் கிழமை ஹிஜ்ரி 1440 முஹர்ரம் முதலாவது நாளாகும்.

தேசிய பிறை பார்த்தல் தொடர்பான ஜமாஅத்தின் அறிவித்தல்.
சர்வதேச பிறை தொடர்பில் ஜமாஅத்தின் அறிவித்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *