நிறைவேற்றுக் குழுக் கூட்டம்

ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் தேசிய நிறைவேற்றுக்குழுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை (28.07.2018) அன்று திஹாரிய ஜாமிஉத் தௌஹீத் ஜும்மா மஸ்ஜிதில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஜமாஅத்தின் தலைவர் அஷ் ஷெய்க் அப்துல் வதூத் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் உப தலைவர்கள் உள்ளிட்ட மத்திய செயற்குழு உறுப்பினர்களும் மற்றும் மாவட்ட நிருவாகங்களின் நிறுவாகிகளும் கலந்துகொண்டனர்.

ஜமாஅத்தின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பிலும், மாவட்ட நிருவாகங்களின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பிலும் அலசப்பட்டதோடு. எதிர்கால் நகர்வுகள் தொடார்பிலும் ஆராயப்பட்டன.

மேலும் குர் ஆன் சுன்னா அடிப்படையில் செயற்படுவோருக்காக ஒரு பிரத்தியேக பிறைக் குழுவொன்று அமைக்கப்படுவதன் அவசியம் பற்றி மாவட்ட நிருவாகங்களால் முன்மொழியப்பட்டது. அந்த அடிப்படையில் பிறை விவகாரமும் நீண்ட கலந்துறையாடலுக்கு உற்பட்டதோடு. அந்த பிறைக் குழு அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொகொள்ளத்தக்க ஒரு குழுவாக அமைய வேண்டும் என்பது அனைவரினதும் அவாவாகவும் இருந்தது.

அத்தகைய பிறைக்குழுவொன்றுக்கான முன்னெடுப்புக்களை ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் மேற்கொள்ள முடிவெடுத்ததுடன். அந்த செயற்பாடு முழுமை பெறும் வரை ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் அந்த பனியை தொடர்ந்தும் செய்து வரும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் பல முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்…

 

கடந்த 28.07.2018 அன்று திஹாரிய ஜாமிஉத் தௌஹீத் ஜும்மா மஸ்ஜிதில் இடம்பெற்ற ஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் நிறைவேறுக் குழுக் கூட்டத்தின் (தேசிய நிருவாகம் மற்றும் மாவட்ட நிருவாகங்களின் சந்திப்பின் சில பதிவுகள்….

Posted by United Thowheedh Jamaath on Monday, July 30, 2018