மீன் வயிற்றினுல் யூனுஸ் நபி, எப்படி ?

மனிதன் வாழ்வதற்கான அத்தனை அம்சங்களையும் பூமிக்கு மேலாக அல்லாஹ் படைத்துள்ளான். செவ்வாய் கிரகத்தில் மனிதனால் வாழ முடியுமா ? என்று ஆய்வு நடத்திக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், மீன் வயிற்றிக்குள் எப்படி ஒரு மனிதரால் உயிர் வாழ முடிந்தது என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.

உலகில் நம்பமுடியாத பல ஆச்சரியமான காட்சிகளை கண்டு வரும் நமக்கு இது ஒரு கேள்விக்குரியாக இருந்தாலும், ஒரு மனிதரால் மீனின் வயிற்றுக்குள் வாழ முடியும் என்ற உண்மையை, அறிவியல் உறுதிப்படுத்துகிறது. அது எப்படி ? என்பதை சமீபத்தில் வீடியோவில் வெளியிட்ட தகவலை எழுத்து வடிவத்தில் உங்கள் சிந்தனைக்கு நான் முன் வைக்கிறேன்.

யூனுஸ் நபி தனது மக்களுடன் முரண்பட்டவர்களாக தனது ஊரை விட்டும் வெளியேறி செல்கிறார்கள். கப்பலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது, கப்பலில் இருந்து ஒருவரை கடலில் தூக்கி போட வேண்டும் என்ற நிலை ஏற்ப்படுகிறது. இறுதியில் யூனுஸ் நபி கடலில் தூக்கி போடப்படுகிறார்கள்.
கடலில் போடப்பட்ட யூனுஸ் நபியை மீன் ஒன்று அப்படியே விழுங்குகிறது. குறிப்பிட்ட நாட்கள் மீன் வயிற்றுக்குள் இருந்த நிலையில், தான் செய்த தவறை உணர்ந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

இறுதியில் யூனுஸ் நபி மீன் வயிற்றில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். யூனுஸ் நபி சம்பந்தமான செய்திகளை (37-139…146,) (21- 88,89) 68- 48…50) (10- 98) ஆகிய குர்ஆன் வசனங்களில் காணலாம்.

மனிதனும் ஆக்ஸிஜனும, (Oxygen)

ஆக்ஸிஜன் இல்லாமல் ஒரு மனிதனால் உலகில் உயிர் வாழ முடியாது. அப்படி என்றால் ஆக்ஸிஜன் இல்லாமல் எப்படி யூனுஸ் நபியால் மீன் வயிற்றுக்குள் உயிர் வாழ முடிந்தது. ?

முதலாவதாக இந்த சம்பவத்தை இறைவனின் மாபெரும் அற்புதம் என்பதை நாம் நம்ப வேண்டும்.

ஆச்சரியம் ஆனால் உண்மை

அடுத்ததாக விஞ்ஞான( அறிவியல்) செய்திகளோடு உரசிப் பார்ப்போம்.

ஒரு மனிதனால் மீன் வயிற்க்குள் வாழ சாத்தியம் உள்ளது என்பதை அறிவியல் உண்மைப்படுத்தகிறது.
மீன் வகைகளில் திமிங்கலம் என்ற ஒரு வகையான இராட்சத மீன்கள் உள்ளன. அவற்றில் பல வகைகள் இருந்தாலும், நீலத்திமிங்கலம் என்ற மீன் மூர்க்கத்தனமில்லாத, சாதுவான மீனாகும்.

கப்பலையே சாய்த்து விடக் கூடிய வல்லமை (சக்தி) கொண்டவையாகும். அப்படி என்றால் அதன் வயிற்றுப் பகுதியை வர்ணிக்க தேவைகிடையாது.

திமிங்கலம் ஏனைய மீன் வகையில் இருந்து சற்று வித்தியாசமானவையாகும். இது மீன் வகை என்றாலும், விலங்கினம் போல் தனது குட்டிகளுக்கு பால் கொடுக்க கூடியதாகும்.

மேலும் அனைத்து மீன் வகைகளும் தனது செவிகளால் காற்றை சுவாசிக்க கூடியதாகும். ஆனால் திமிங்கலம் மனிதனைப் போல நுரையீரல் மூலமாக சுவாசிக்க கூடியதாகும்.

மேலும் திமிங்கலம் நீருக்கு மேலாக வந்து தனக்கு தேவையான காற்றை (ஆக்ஸிஜனை) உள் வாங்கி இழுத்துக் கொள்ளும். நீருக்குள் மூச்சை விடாமல், மூச்சை அடக்கிக் கொண்டு சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் நீருக்குள் இருக்க கூடிய வல்லமை கொண்டது.

பொதுவாக மனிதர்கள் காற்றின் மூலம்15 வீத ஆக்ஸிஜனை உள் இழுக்கிறார்கள். ஆனால் திமிங்கலம் 90 வீதமான ஆக்ஸிஜனை உள் இழுக்கிறது. நீருக்குள் ஏழாயிரம் அடிக்கு கீழே (ஆழம்) சென்றாலும் நீண்ட நேரம் மூச்சை அடக்கி கொண்டு நீருக்குள் இருக்க முடியும்.

திமிங்கலத்தின் இந்த தனித்தன்மையை கவனித்தால், சுவாசித்து உள்ளே சேமித்து வைத்திருக்கும் ஆக்ஸிஜன், மீனின் வயிற்றுக்குள் இருந்த யூனுஸ் நபிக்கு போதுமானதாகும்.

எனவே ஒரு மனிதனால் இப்படியான மீன் வயிற்றுக்குள் வாழ முடியும் என்பதை அறிவியல் மூலம் உண்மைப் படுத்த முடியும் அல்ஹம்து லில்லாஹ் !

2016ம் ஆண்டு இப்படியான சம்பவம் ஒன்று ஸ்பெயினில் நடந்ததை இணையத்தளங்களில் காணலாம்.
லூகி மார்கியூஸ் என்ற 56 வயதான ஒரு மீனவர் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற போது, காலநிலை மாற்றத்தால் இவர் காணாமல் போய் விடுகிறார். குடும்பத்தார்களின் முறைப்பாட்டை அடுத்து பாதுகாப்பு படை தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள் ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

இறுதியாக இவர் கடலில் சிக்கி மரணமடைந்து இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.

சுமார் மூன்று நாட்களுக்கு பின் ஒரு பெரிய இராட்சத மீனின் கழிவுகளிருந்து மயங்கிய நிலையில் மீட்டெடுத்துள்ளார்கள்.

சுமார் 72 மணித்தியாலயங்கள் திமிங்கல வயிற்றிலே இருந்துள்ளார்.

நான் இது வரை மீன் வயிற்றில் உயிர் வாழ்ந்தது ஆச்சிரியமான விசயமாகும். மீன் வயிற்குள் நாற்றமாக இருந்தது என்று அவர் கூறியுள்ளார்.

எனவே யூனுஸ் நபி எப்படி மீன் வயிற்றுக்குள் இருந்திருப்பார் என்பதற்கு விடை கிடைத்து விட்டது அல்ஹம்து லில்லாஹ் !

மௌலவி யூனுஸ் தப்ரீஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *