ஹிஜ்ரி 1439, துல் கஃதா பிறை அறிவித்தல்

இன்றைய தினம் உள்நாட்டில் துல் கஃதா மாததிற்கான தலைப் பிறை பார்க்கும் தினமாகையால் மக்களிடம் பிறை பார்க்குமாறு ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் வேண்டியிருந்தது. அந்த அடிப்படையில் சமூக ஊடகங்கள், தேசிய பத்திரிகைகளூடாகவும் இவ்வறிவித்தைல் மக்களுக்கு எத்திவைக்கப்பட்டது.

இவ்வறிவித்தலின் பிரகாரம் UTJ யின் மாவட்ட நிருவாகங்களின் ஒத்துழைப்புடனும், பொது மக்களின பங்கேற்புடனும் இன்றைய தினம் பிறை பார்க்கப்பட்டது. அந்த அடிப்படையில் நாட்டின் எப்பாகத்திலும் இன்றையதினம் (13.07.2018) பிறை தென்படவில்லை என ஊர்ஜீதமாகியுள்ளது. எனவே ஷவ்வால் மாதத்தி 30 ஆக பூத்திசெய்வதாகவும்,  துல் கஃதா மாதம் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை ( 15.07.2018) முதல் ஆறம்பமாகுமெனவும் அறிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் UTJ யின் பொதுச் செயலாளர் விடுக்கும் உத்தியோகபூர்வ அறிவித்தல் கீழே உள்ளது.

_________

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுழ்ழாஹி வபரகாத்துஹு.

அன்பிற்கும் மதிப்புக்குமுரிய இஸ்லாமிய உறவுகளே!

துல் கஃதா தலை பிறை சம்பந்தமான அறிவித்தல்

ஹிஜ்ரி 1439 துல் கஃதா தலைப்பிறையை இன்றைய தினம் ஹிஜ்ரி 1439 ஷவ்வால் 29 (2018/07/13) பார்க்குமாறு நாட்டு மக்களுக்கு ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் அறிவித்திருந்தது. இந்த செய்தி ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் மாவட்ட நிருவாகங்களூடாகவும் அந்ததந்த மாவட்டங்களிலுள்ள ஜும்ஆ பள்ளிவாசல்கள், தஃவா நிலையங்கள், தஃவா அமைப்புக்கள் ஊடாகவும் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் நாட்டின் எப்பாகத்திலாவது பிறை தென்படவில்லை என்ற ஊர்ஜிதமான செய்திகள் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் மாவட்ட நிருவாகங்கள் ஊடாக ஜமாஅத்தின் தலைமையகத்துக்கு கிடைக்கப்பெற்றது. அதன் அடிப்படையில் ஹிஜ்ரி 1439 ஷவ்வால் மாதம் 30 நாட்களாக பூர்த்தியாகின்றதென்பதை ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் உத்தியோகபூர்வமாக நாட்டு மக்களுக்கு அறிவித்துக்கொள்கின்றது.

“அல் குர்ஆன் அஸ்ஸுன்னாவின் நிழலில் ஒன்று படுவோம்”

ஜஸாக்கழ்ழாஹ் ஹைர்

இப்படிக்கு

பொதுச்செயலாளர்
ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்.