வெள்ள அனர்த்த நிவாரனம், கொட்டாரமுல்லை

அண்மையில் பெய்த கடும்மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் நாத்தாண்டிய தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள கொட்டாரமுல்ல கிராமத்தின் ஒரு பகுதி நீரில் மூழ்கியதால் பல நூற்றுக்கணக்கான மக்கள் குடிபெயர்ந்து வெள்ளநீர் வற்றிய பின் தத்தமது வீடுகளுக்குத்திரும்பியுள்ளனர்.

என்றாலும் கிணறுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் கிணறுகள் மாசடைந்ததால் அன்றாட நீர்ததேவைகளுக்கு சிரமபபட்டுக்கொணடிருந்தமை ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து மக்களுக்கு உதவ ஜககிய தௌஹீத் ஜமாத் (UTJ) களமிறஙகியது.

கடந்த 2018/06/04 ஆம் திகதி கிணறுகளை சுத்தம் செயவதற்குத் தேவையான நீர்இறைக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட சகல உபகரணங்களும், கொட்டாரமுல்ல “சமூக மேம்பாட்டுக் கழக” உறுப்பினர்கள் மற்றும் UTJ கிளையினரிடம் கையளிக்கபபடடது. இந்நிகழ்வில் UTJ பொதுச் செயலாளர் ஏ.எல்.எம். மன்ஸூர், மஜ்லிஷுஷ் ஸூறா மற்றும் உயர்பீட உறுப்பினரும் இபுனு மஸ்ஊத் அரபுக் கல்லூரி அதிபருமான அஷ்ஷெய்க் நஸுருத்தீன் (பலாஹி), UTJ சமூக சேவைப் பிரினர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். உபகரணங்கள் கையளிக்கபபடுவதையும், உத்தியோகபூர்வமக கிணறுகளை சுத்திகரிக்கும் ஆரம்பித்துவைக்கபபட்ட நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.