அனர்த்த சூழ்நிலையில் அவதானமாக இருப்போம்.

அனர்த்த சூழ்நிலையில் அவதானமாக இருப்போம்.

தென்மேல் பருவமழை பொழிய ஆரம்பித்துள்ள நிலையில் நாட்டில் சீரற்ற காலநிலை தோன்றியுள்ளதை நாம் அறிவோம். நாட்டின் பல பாகங்களிலும் வெள்ள மற்றும் மன்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய சீழ்நிலையில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்வது சிறந்தது.

முக்கியமாக தாம் வசிக்கும் பிரதேசத்திற்கு அனர்த்த பாதிப்புக்களுக்கான வாய்ப்புகள் உள்ளனவா என்பது தொடர்பில் தெளிவோடு இருப்பதோடு, அத்தகைய சந்தர்ப்பமொன்றில் இடம்பெயர்வதற்கான ஒழுங்குகளை உடனடியாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்.

இத்தகைய சூழலில் பல வதந்திகளும் பரப்பப்படுவதால், அனத்தம் தொடர்பில் எச்சரிக்கை உத்தியோகபூர்வமற்ற ஒரு வழியில் கிடைக்குமானால் அது தொடர்பில் 117 இலக்கத்தினூடாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக்கொள்வது சிறந்தது.

மேலும், இடர் முக்கமைத்துவ அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை கருத்திலெடுத்து செற்படுமாறு வேண்டிக்கொள்கிறோம். அத்தோடு அவசர நிலையில் தொடர்புகொள்ள வேண்டிய கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களையும் பதிந்து வைத்துக்கொள்வது பொறுத்தமெனக் கருதுகிறோம்.

117 – அனர்த்த முகாமைத்துவ நிலையம்

119 – பொலிஸ் அவசர சேவை

1990 – அவசர அம்பியூலன்ஸ் சேவை

1998 – மத்திய மின்சார சபை

மேலும், இடர் முக்கமைத்துவ அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றினால் வெளியிடப்பட்ட “அனர்த்த தயார்நிலைத் திட்டம்” தொடர்பிலான அறிவித்தலையும் இத்தோடு இணைத்துள்ளோம். அதில் கூறப்பட்டுள்ள ஒழுங்குகள் மற்றும் முன் ஏற்பாடுகள் தொடர்பில் கரிசனை காட்டுமாறூம் பொது மக்களை ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் வேண்டிக்கொள்கிறது.

ஏ.எல்.எம். மன்சூர்,
பொதுச் செயலாளர்,
ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்