தினக்குரல்- பத்திரிகை தர்மத்தை பேணுமா ?

மௌலவி யூனுஸ் தப்ரீஸ்

UTJ தஃவா குழுத் தலைவர்

மீடியாக்கள் பக்கச் சார்பின்றி நீதியாகவும், நேர்மையாகவும் பணியாற்ற வேண்டும்.

பத்திரிகைகளைப் பொருத்த வரை பத்திரிகை தர்மம் என்று உள்ளது.

அது தனக்கு நெருக்கமானதாக இருந்தாலும் சரி, அல்லது வெறுப்புக்குறியதாக இருந்தாலும் சரி பத்திரிகை கொள்கையிலிருந்து சரிந்து விடக் கூடாது.

ஆனால் தினக் குரல் பத்திரிகை தன் இனம் என்பதற்காக உண்மையை மறைத்து முஸ்லிம்களை இனவாதிகளாக தலைப்பு செய்தியில் பிரசுரித்திருப்பது அருவருக்கத் தக்கதாகும்.

கடந்த 28-04- 2018 சனிக்கிழமை வெளியான தினக்குரல் பத்திரிகையின் தலைப்பு செய்தியில் கிழக்கில் தழிழர்களுக்கெதிராக தலை தூக்கும் முஸ்லிம் இனவாதம். என்று திருகோணமலை சண்முக வித்தியாலய அதிபர், ஆசியர்கள், ஏனைய ஆர்ப்பாட்டம் செய்த பெற்றோர்கள், பழைய மாணவிகள் அனைவர்களையும் இழிவாகவும், அசிங்கமாகவும், ஆபாசமாகவும், சமூக வலைத் தளங்களில் பொறுப்பற்ற வகையில் முஸ்லிம் இளைஞர்கள் கருத்துகளை பதிந்து வருகிறார்கள்.

இதன் மூலம் தழிழ் இளைஞர்களின் உணர்வுகளை தூண்டி இனக்கலவரம் ஒன்றுக்கு தூபமிடுவதற்கு சதி செயலாகும்.

பாடசாலை நிர்வாகத்திற்குள் நடக்கும் விடயங்களை தீர்த்துக் கொள்ள உயர் அதிகாரிகள் துறை சார்ந்த நிறுவனங்கள் உள்ள நிலையில் இதன் பின் புலத்தில் முஸ்லிம் அரசியல் சக்திகள் நின்று தழிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம் இளைஞர்களை தவறாக வழி நடத்துகின்றனரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

சமூக வலைத் தளங்களில் குறிப்பிட்ட சில முஸ்லிம் இளைஞர்கள் அப்படி எழுதியதை இனவாதமாக பார்க்கும் நீங்கள் திருகோணமலை சண்முக வித்தியாலய ஆர்ப்பாட்டத்தின் போது தமிழ் வித்தியாலயம். இது தழிழ் இனத்துக்கே, என்ற சுலோகங்கள் ஏந்தியதை கவனிக்க வில்லையா அல்லது தன் இனம் என்பதற்காக உங்கள் கண்களுக்கு அவைகள் விளங்க வில்லையா ?

இங்கு யார் நேரடியாக இனவாதம் பேசுகிறார்கள் என்பதை சற்று நிதானமாக சிந்தியுங்கள்.

இப்போது சொல்லுங்கள் யார் இனவாதத்தை தூண்டுவது என்று ?முழு பூசனிக்காயையும் சோற்றில் மறைக்கப் பார்க்கீறீர்களா ?

உங்களை போன்றோர் இப்படியான செய்திகளை தவறாக பிரசுரப்பதினால் தான், இதை விட வேகமாக மக்களிடத்தில் செல்லும் வலை தளங்களை இன்று மக்கள் பாவிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஒரு காலத்தில் உங்களை போன்ற பத்திரிகைகளுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஆனால் இன்று உங்களை போன்றோருக்கு பாடம் நடத்தும் அளவிற்கு அனைவரின் கைகளிலும் மீடியாக்கள் உருவாகி விட்டது.

உங்களை போன்றோர் மறைக்கும் பல செய்திகளை மின்னல் வேகத்தில் சமுகத்திற்கு கொண்டு போக ஆரம்பித்து விட்டார்கள்.

இன வாதங்களை கக்கும் உங்கள் போன்ற பத்திரிகைகளை உங்கள் மக்களே புறக்கணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

முஸ்லிம்களை இனவாதிகள், தீவிரவாதிகள் என்று இன்றைய கேடுகெட்ட மீடியாக்கள் நச்சுக் கருத்துகளை உலக மட்டத்தில் பரப்பி வருகின்றன.

ஆனால் இஸ்லாத்திற்கு இறைவனின் ஆசி உள்ளதால், உலகம் முழுவதும் இஸ்லாம் விரூச்சமாக வளர்ந்து, பரவி வருகிறது.

இஸ்லாத்தின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அல்லாஹூ அக்பர் !

பாடசாலை நிர்வாகத்திற்குள் நடக்கும் விடயங்களை தீர்த்துக் கொள்ள உயர் அதிகாரிகள் துறை சார்ந்த நிறுவனங்கள் இருக்கிறார்கள் என்றால் ஏன் ஆசிரியர்களும், பொதுமக்களும், பழைய மாணவிகளும் பாடசாலைக்கு வெளியே வந்து கோசமிட்டார்கள்.?

பிரச்சனையை வெளியே கொண்டு வந்தது யார் என்பதை மறந்து விட்டீர்களா ?

அல்லது தன் இனம் என்பதற்காக அதை தூக்கி பிடிக்க வில்லையா ? சிந்தியுங்கள்.

இவர்களை தூண்டி விட்ட இனவாதிகள் யார் என்று தேடுங்கள். ?

இனவாதிகளை உள்ளே வைத்துக் கொண்டு ஏன் நாடகம் ஆடுகிறீர்கள்.?

தழிழ் பேசும் மக்களுக்கு தனி நாடு வேண்டும். தனி ஈழம் என்று இனவாதத்தை தூண்டி விட்டு ஒன்றாக கலந்து வாழ்ந்த முஸ்லிம்களை ஈவிரக்கமின்றி ஊரை விட்டு துரத்தி விட்டார்களே ! யார் இனவாதிகள் என்று புரிகிறதா ?

முஸ்லிகளுடைய சொத்துகளையும்,பொருளாதாரங்களையும்,எந்த இனவாதிகள் பலவந்தமாக அபகரித்து, கொள்ளையடித்தார்கள் என்பதை மறந்து விட்டீர்களா ?

முஸ்லிம்களை பல பகுதிகளில் விரட்டி, விரட்டி கொலை செய்த இனவாதிகளை மறந்து விட்டீர்களா ?

காத்தான் குடி பள்ளியில் முஸ்லிம்கள் ஜூம்மா தொழுது கொண்டிருக்கும் போது தாறு மாராக துடிக்க துடிக்க கொலை செய்த இனவாதத்தை மறந்து விட்டீர்களா ?

பட்டியல் போட்டால் உண்மையான இனவாதிகள் யார் என்று பளிச்சிடும்.

எப்போதும் நல்லதை விரும்பும் முஸ்லிம்களையா இனவாதிகள், இனவாதத்தை தூண்டுகிறார்கள் என்று பச்சையாக எழுதுகிறீர்கள்

எப்படி இப்படி பொய்யை பகிரங்கமாக எழுதுவதற்கு உங்கள் மனம் இடம் கொடுத்தது.

மன சாட்சி உறுத்த வில்லையா ?

நாங்கள் அல்லாஹ்வின் மீது அதி நம்பிக்கை கொண்டவர்கள்.

முஸ்லிம்கள் இனவாதத்தை தூண்டுகிறார்கள் என்று இந்த வாசகத்தை எழுதியதற்காக நீங்கள் பகிரங்கமாக முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்கா விட்டால், அநியாயமாக முஸ்லிம்களை இனவாதிகள் என்று எழுதிய உங்களை இறைவன் சும்மா விட மாட்டான். பொருத்திருந்து பாருங்கள்.

இறைவனின் கோபப் பார்வையை விரைவாக எதிர் பாருங்கள்.

மேலும் இந்த ஹிஜாபிற்கு பின்னால் முஸ்லிம் அரசியல் சக்திகள் செயல்படுகிறார்களோ என்று எழுதியுள்ளீர்களே அதை அப்படியே திருப்பி பாருங்கள். சண்முக வித்தியாலயத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு பின்னால் தமிழ் அரசியல் சக்தி இயங்கவில்லை என்பது என்ன நிச்சயம். என்று நாங்கள் திருப்பி கேட்டால் ?

உங்களுக்கு வந்தால் இரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா ?

அரசியல்வாதிகளைப் பொருத்த வரை மக்களுக்கு குரல் கொடுப்பதற்காக தான் மக்களின் பிரதிநிதிகளாக பாராளு மன்றத்திற்கு செல்கிறார்கள்.

மக்களின் உரிமைகளையும், சலுகைகளையும் களத்தில் பேச வேண்டும். வெறுமனே சொத்துகளை சேர்ப்பதற்காகவும், சுகண்டியாக வாழ்வதற்காகவும், உல்லாசமாக ஊர் சுற்றுவதற்காகவும் மக்கள் அவர்களை பாராளுமன்றம் அனுப்பவில்லை ?

மக்களின் வாக்குகளை பெற்ற அவர்கள் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கா விட்டால் வீதியிலே விரட்டி, விரட்டி அடிக்கும் அளவிற்கு மக்கள் இன்று வலுப் பெற்று விட்டார்கள்.

எனவே இனவாத கருத்தை நீங்கள் விதைத்து மீண்டும் உங்கள் மக்களின் அழிவுக்கு காரணமாக நீங்கள் மாறிவிடாதீர்கள்.
இறை தண்டணையை பயந்து கொள்ளுங்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *