வேலூர் இப்றாஹீமுக்கு அன்பு கட்டளை…

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் (இலங்கை)

-UTJ தஃவா குழுத் தலைவர்-

தழிழ் நாடு ஏகத்துவ ஜமாத்தை(TNEJ) சார்ந்த சகோதரர் வேலூர் இப்றாஹீம் அவர்களுக்கு ! சமீப காலமாக பிஜே அவர்களின் சில தவறான செய்திகளை மக்களுக்கு முன்னால் கொண்டு வந்து பிஜேயை இப்படி தான் செய்ய வேண்டும் என்று யாரும் ஏற்று கொள்ள முடியாத, இஸ்லாம் அனுமதிக்காத சில அருவருப்பான செயல்பாடுகளை நீங்கள் பேசியும், செய்தும் வருகிறீர்கள்.

அருவருப்பான வார்த்தை பிரயோகங்களையும், தவறான செயல் பாடுகளையும், கட்டாயம் தவிர்ந்து கொள்ளுங்கள்.

இது நான் உங்களுக்கு செய்யும் உபதேசம் அல்ல, மாறாக நம் அனைவருக்கும் அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் பல கோணங்களில் சொல்லக் கூடிய உபதேசங்களாகும்.

அழகிய உபதேசத்தைக் கொண்டு தர்க்கம் (பேசுங்கள்) என்பது இறை கட்டளையாகும்.

அதை மீறி இவருக்கு இப்படி சொன்னால் தான் புரியும், அவருக்கு அப்படி சொன்னால் தான் புரியும், அல்லது சந்தர்ப்பம் எனக்கு சாதகமாக இருக்கிறது சம்பந்தப்பட்டவரை சந்திக்கு இழுத்து நாழுபேருக்கு மத்தியில் சிரிக்க வைக்க வேண்டும் என்று பல தவறான முயற்சிகளில் ஈடுபடுவது நம்மையே நாம் இழிவுக்கு ஆளாக்கிறோம் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

‘பேசினால் நல்லதை பேசுங்கள் அல்லது மௌனமாக இருங்கள் என்று ,இதை நாம் பிறருக்கு சொல்வதற்காக மட்டுமா நபியவர்கள் கற்றுத் தந்தார்கள். சற்று சிந்தியுங்கள்.

தன் நாவினாலும், கையினாலும் பிறருக்கு இடைஞ்சல் கொடுக்காதவனே முஸ்லிம் என்று வெறுமனே நாம் பேசுவதற்காக மட்டுமா நபியவர்கள் நமக்கு சொல்லித் தந்தார்கள்.?

பிறர் மீது நல்லெண்ணம் வைய்யுங்கள், பிறரை துருவி, துருவி ஆராயாதீர்கள், (பிறர் விரும்பாத) பட்டப் பெயரால் அழைக்காதீர்கள். பிறரை இழிவாக எண்ணாதீர்கள், பிறர் மானத்தை பாதுகாருங்கள், பிறர் தனக்கு செய்த தவறுகளை மன்னியுங்கள், பிறருக்காக விட்டுக் கொடுங்கள், அல்லாஹ்விற்காக பணிவை மேற்க் கொள்ளுங்கள் என்று இப்படியான உபதேசங்களை அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் அவர்களும் யாருக்காக சொன்னார்கள்.?

இந்த உபதேசங்கள் வெறுமனே ஏட்டு சுரைக்காய்களாக இருக்க கூடாது. ஒவ்வொரு முஸ்லிமுடைய வாழ்விலும் நடை முறையில் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான முஃமின்களாவார்கள்.

பிறரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் இந்த உபதேசங்கள். அவர்கள் தான் மிக கவனமாக இருக்க வேண்டும். நான் பிறரால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதற்காக தவறான வழி முறைகளை கையாளக் கூடாது.

சமீப காலமாக பிஜேயை அருவருப்பான வார்த்தைகளால் பேசி வருகிறீர்கள், மேலும் அவருடைய போட்டோவை வைத்து பெண்கள் மூலமாக செருப்பாலும், விளக்கமாத்தாலும், மாறி, மாறி அடிக்க ஏற்பாடு செய்து அந்த அசிங்கத்தை அரங்கேற்றியுள்ளீர்கள். இது யாருடைய கலாசாரம்.?

கருத்துகளை கருத்துகளால் சந்தியுங்கள்.

குர்ஆன், மற்றும் ஹதீஸ் தெளிவுகளை முன் வைத்து அவரது பிழையான கொள்கையை சுட்டிக் காட்டுங்கள்.

அதை விட்டு விட்டு சம்சுதீன் காசிமுக்கு பெண்களை ஏவி விட்டு செய்தார்கள், சாணியை கரைத்து வீட்டுக்குள் ஊற்றினார்கள். எனவே நாம் ஏன் இவருக்கு செய்யக் கூடாது என்று அதே தவறை செய்து அல்லாஹ்வின் தண்டனைக்கு நீங்கள் ஆளாகி விட வேண்டாம்.

சம்சுதீன் காசிமுக்கு அப்படி செய்தது யாராக இருந்தாலும் தவறு தவறு தான். அதற்கான தண்டனையை சம்பந்தப்பட்டவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும்.

அப்படியான வேலைகளில் ஈடுபட்டவர்களை தண்டிப்பது அல்லாஹ்வுடைய வேலை, அதற்காக நாங்களும் அப்படி செய்ய வேண்டும் என்று இஸ்லாம் நமக்கு கற்றுத் தரவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

எனவே யார் தவறு செய்தாலும் அதை சம்பந்தப்பட்டவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும். எந்த பக்கத்தில் அருவருப்பான வார்த்தைகள் பேசினாலும், அல்லது அருவருப்பான நடவடிக்கைகளில் இறங்கினாலும். அல்லாஹ்வுடைய கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாகவே வேண்டும்.யாரும் தப்பிக் முடியாது.

என்னை பொருத்தவரை நான் பிஜேவுடைய இந்த ஹதீஸ் மறுப்பு கொள்கைக்கு நேர் எதிரானவன், அதே நேரம் என்னால் முடிந்தளவிற்கு குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும் அன்றிலிருந்து பல அவர்களின் மார்க்க ரீதியிலான தவறுகளை கொள்கை ரீதியாக எடுத்துக் காட்டிக் கொண்டே வருகிறேன். இன்ஷா அல்லாஹ் தொடர்ந்தும் சத்தியக் கொள்கைக்காக எழுதுவேன்.

ஏற்றுக் கொள்வது ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது அவர்ரவர்களின் விருப்பம். அதற்காக சந்தர்ப்ப சூழ்நிலைகளை தனக்கு சாதகமாக பயன் படுத்தி இழிவுப் படுத்தும் காரியங்களில் ஈடுபடுவோமேயானால், நம்மை அறியாமல் ஒரு நாள் அல்லாஹ் நம்மை இழிவாக்குவான் என்பதை மறந்து விடக் கூடாது.

பலரை தஃவா களத்தில் மானங்கப் படுத்தியவர்கள் இன்று அவர்களை அல்லாஹ் அசிங்கப் பட வைத்து தலை குனிவை ஏற்படுத்தி வருகிறான் என்றால். அல்லாஹ் செய்யக் கூடிய வேலையை அடியார்களாகிய நாம் கையில் எடுக்க தேவையில்லை,

மீறி நாங்கள் எடுத்தால். விளைவு மிக மோசமகவே நம் மீது அமைந்து விடும். சற்று நிதானமாக சிந்தியுங்கள்.

அல்லாஹ்வுடைய உபதேசங்களை யார் மீறி செயல் படுகிறாரோ அவர்களை நாம் மானபங்கப்படுத்த தேவை இல்லை,அதைப் பற்றி நாம் அலட்டிக் கொள்ளவும் தேவையில்லை, காலம், நேரம் வரும் போது சரியான இடத்தில் வைத்து அல்லாஹ்வே சம்பந்தப்பட்டவர்களை கேவலப்படுத்துவான்.

உங்களுக்கு தேவையேற்ப்பட்டால் அவரை பேசுவதற்கு அழையுங்கள், அல்லது முபாஹலாவிற்கு அழையுங்கள். ஆனால் மனித நேயம், மனிதாபிமானம் என்றடிப்படையில் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள்.

அவர் வர வில்லையா உங்களது தஃவாவை வீரியமாக எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் ஏகத்துவ கொள்கையில் உறுதியாக இருப்பீர்களேயானால், ஏற்றுக் கொண்ட கொள்கையில் தெளிவாக இருப்பீர்களேயானால் சத்திய மார்க்கத்தை மக்கள் மன்றத்தில் முன் வைப்பதற்காக பல வழிகளில் பாடுபடுங்கள்.

அல்லாஹ் உங்களோடு இருப்பான்.

உங்கள் மறுமை வாழ்வை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

இந்த உபதேசம் வேலூர் இப்றாஹீமுக்குமட்டும் அல்ல. யாரெல்லாம் பிறரை மானபங்கப்படுத்தும் நோக்கில், அல்லது இழிவுப் படுத்தும் நோக்கில், அல்லது கேலி,கிண்டல் செய்யும் விதமாக நடந்து கொள்கிறார்களோ அவர்களை அல்லாஹ் இந்த உலகத்தில் இழிவு படுத்துவான், மறுமையில் தண்டிப்பான் என்பதை விளங்கி கொள்ள வேண்டும்.

அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *